காளகஸ்தி கோயிலில் ரஷ்ய நாட்டு இளம்பக்தர்கள் வழிபாடு

காளகஸ்தி கோயிலில் ரஷ்ய நாட்டு இளம்பக்தர்கள் வழிபாடு

1 mins read
21323936-31f8-406c-bd0d-9d786659af8e
ரஷ்யாவைச் சேர்ந்த 30 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். - படம்: இந்திய ஊடகம்

காளகஸ்தி: ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற காளகஸ்தி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சிறந்த ராகு-கேது ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். திங்கட்கிழமை காலையில் அங்கு நடந்த ராகு-கேது பூஜையில் பயபக்தியுடன் கலந்துகொண்டனர்.

இக்கோயிலின் பிரகாரத்தில் 30 ரஷ்ய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து மந்திரங்கள் ஓதப்பட்டது. அப்போது பயபக்தியுடன் அவர்கள் வழிபாடு செய்தனர்.

பூஜையின் போது ரஷ்ய பக்தர்கள் பூக்கள், பழங்கள், தீப விளக்குகள் வைத்து வழிபாடு செய்த நிகழ்ச்சியை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.

மேலும் இந்த பூஜையில் பங்கேற்ற ரஷ்ய பக்தர்களின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கோயில்