வரிப் பகிர்வில் அநீதி: கர்நாடகாவிற்கு 4 ஆண்டுகளில் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு

1 mins read
14e539fe-fca7-4c8f-9fea-ef34ef1bcf16
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா.  - படம்: இந்திய ஊடகம்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்திற்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துவிட்டது. அது கர்நாடகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரிப்பணம், மாநிலத்தினுடைய இக்கட்டான நிலையின்போது பயன்படவில்லை. அந்த பணம் எல்லாம் வடமாநிலத்திற்குச் செல்கின்றன.

“15வது நிதி ஆணையத்துக்குப் பிறகு வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை தாங்க முடியாது. நம்முடைய மாநிலத்தின் நலத்தைப் பாதுகாக்க, நியாயமான முறையில் நடத்த நாம் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும்,” எனத் தெரிவித்துள்ள அவர் “SouthTaxMovement” ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சித்தராமையா கலந்து கொள்ள இருக்கிறார்.

தெற்கு மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இதனால் ஒருபோதும் நமக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது. இந்த தவறான எண்ணத்தை அனைவரும் கைவிட வேண்டும். கடின உழைப்பால் வலுவான தேசத்தை உருவாக்கி வரும் கர்நாடகா இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது என்பது அவர்களின் முழக்கமாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்