தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலுக்கு முழுக்குப் போடுவேன்: ஹேமந்த் சோரன்

1 mins read
d7538007-f2de-44a9-a7cf-2dde15797c83
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். - கோப்புப்படம்: ஊடகம்

ராஞ்சி:நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க பாதுகாப்புடன் சட்டமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அப்போது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் தீர்மானத்தின் மீது பேசிய ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.

நான் கைது செய்யப்பட்ட ஜன.31ஆம் தேதி, இந்திய வரலாற்றில் இந்தக் கைது நடவடிக்கை ஒரு கறுப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும்.

என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு துணிச்சல் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும். அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலுக்கு முழுக்குப் போடுகிறேன் என்று பாஜகவுக்கு சவால் விட்டுள்ளார் ஹேமந்த்.

“ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை,” என்று அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்