மாலத்தீவு: மூன்று மாதங்களில் இந்திய படைகள் வெளியேறிவிடும்

மாலி: மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகள் வரும் மே மாதத்திற்குள் வெளியேறிவிடும் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முகம்மது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முகம்மது மொய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாலத்தீவின் மூன்று விமானத் தளங்களில் இந்திய படைகள் உள்ளன. அவற்றில் ஒரு விமானத் தளத்தில் உள்ள இந்திய படை மார்ச் 10ம் தேதிக்குள் வெளியேறிவிடும். மற்ற இரண்டு விமானத் தளங்களில் உள்ள இந்திய படையினர் மே 10ஆம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா - மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முகம்மது மொய்சுவின் இந்திய விரோதப் போக்கு தவறானது என கூறி வரும் எடிபி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை, அதிபர் முகம்மது மொய்சுவை பதவிநீக்கம் செய்ய முயன்று வருகின்றன.

மாலத்தீவில் உள்ள இந்திய துருப்புகள் அந்நாட்டில் மனிதாபிமான உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றன.

படைகளை இந்தியா திரும்பப் பெற்றாலும், விமானப்படைத் தளங்களை தொடர்ந்து பயன்படுத்த மாலத்தீவு உடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறி இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!