தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவிலில் சிறுமி சீரழிப்பு; ஆடவருக்கு 30 ஆண்டுச் சிறை

1 mins read
c3ddc7db-0e6b-41ef-8e8b-a05f25eff062
மாதிரிப்படம்: - பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவில் ஆலயம் ஒன்றில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த ஆடவருக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் குற்றவாளி என்று முன்னதாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் மறுவுறுதிப்படுத்தியது.

அந்நபரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

அச்சம்பவம் 2018ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது. அச்செயலைப் புரிந்தபோது அந்த ஆடவருக்கு வயது 40.

பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச வயதுக்குக்கீழ் இருக்கும் பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை இழைத்ததாக சிறுமியின் பாட்டி ஆடவருக்கு எதிராகக் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்