தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் துர்நாற்றம்: தரையிறங்கிய இண்டிகோ விமானம்

1 mins read
23486fa4-e9b5-4b71-9032-c47ccd3dbb3f
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: வெள்ளிக்கிழமை காலை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்தது. விமானத்திற்குள் திடீரென துர்நாற்றம் வீசியதால் பாதுகாப்பு கருதி விமானத்தை தரையிறக்க அனுமதிக்கும்படி விமானி கேட்டுக்கொண்டார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இண்டிகோ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்