திருப்பதி: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள உத்தரகாஞ்சியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் பிப்ரவரி 7ஆம் தேதி ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஐவர் கொண்ட கொள்ளைக் கும்பல் வங்கி இயங்கி வரும் கட்டடத்தின் பின்புறம் உள்ள சன்னல் கம்பியை வெட்டி வங்கிக்குள் புகுந்து, இரு பெட்டகங்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். கைரேகைகள் பதிவாகாமல் இருக்க அந்தப் பெட்டகங்களை ‘கேஸ் கட்டர்’ மூலம் எரித்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் ஐவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கேமரா பதிவுகளை வைத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.