மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அதானி

1 mins read
96442abd-d79c-42dc-93bb-42eb0e535154
கௌதம் அதானி - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஒரே வருடத்தில் அதானியின் சொத்து மதிப்பு யுஎஸ் டாலர் 100 பில்லியனை (ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் கோடி) தாண்டியிருக்கிறது.

இதன் மூலம் அதானி மீண்டும் உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பட்டியலில் அவர் 12வது இடத்தில் உள்ளார்.

ஆண்டின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையின் மீட்சிக்கும் புதிய உச்சங்களுக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் அதிகம் பங்களித்து வருகின்றன. அவரது முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் கடந்த வாரம் லாபத்தில் 130% உயர்வை அறிவித்ததும், அதன் பங்குகள் தொடர்ந்து 8வது நாளாக பிப்ரவரி 7ஆம் தேதி உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்