பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

1 mins read
6218ce7f-602a-43a9-a0d2-c1e988f63aa1
இந்துஸ்தானி அவாம்மோர்ச்சா கட்சி தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதி‌ஷ் குமார் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இந்துஸ்தானி அவாம்மோர்ச்சா கட்சியின் 4 எம்எல்ஏ.க்களுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தே.ஜ.கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார்.

இந்த அரசு சட்டமன்றத்தில் திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறது. வாக்கெடுப்பை சீர்குலைக்கும் முயற்சியில் எதிர்க்ட்சிகள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் பிரிவு தலைவர் மெகபூப் ஆலம், இந்துஸ்தானி அவாம்மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்