விமானத்தில் இருக்கை மறுப்பு: தம்பதிக்கு ரூ.48,000 இழப்பீடு வழங்க உத்தரவு

புதுடெல்லி: வயதான தம்பதி கூடுதலாக பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை அவர்களுக்குத் தர மறுத்த ஏர் இந்தியா நிறுவனம் ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.

சுனில் பார்தியும் அவரது மனைவியும் டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு செல்வதற்காக இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்துள்ளனர். வயதானவர்கள் என்பதால் கால்நீட்ட வசதியாக உள்ள இருக்கைக்கு கூடுதலாக ரூ.18,000 அவர்கள் செலுத்தியுள்ளனர்.

ஜூன் 22, 2022ஆம் ஆண்டு பயணம் செய்ய ஜூன் 6, 2022 அன்று தம்பதி முன்பதிவு செய்தனர்.

பயணத்தின்போது அந்த வயதான தம்பதியினருக்கு முன்பதிவு செய்திருந்த இருக்கைகளுக்கு பதிலாக வேறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்து தம்பதி விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது ஊழியர்கள் கோபமாக நடந்து கொண்டார்கள். பின்னர் தம்பதி முன்பதிவு செய்த இருக்கைகள் ‘விஐபி’க்களுக்கு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த லோக் அதாலத் தலைவர் எஸ்.கே. சச்தேவா, “பணத்தை வசூலித்த பிறகு இருக்கைகளை சரிபார்த்து வழங்குவது ஏர் இந்தியா நிறுவனத்தின் கடமை. இதில், அப்பாவி பயணிகளிடம் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருந்தும் அவர்கள் 15 மணி நேரம் அசெளகரியமான பயணத்தை அனுபவித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு ஏர் இந்தியா ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும்,” என்று உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!