தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறுவை சிகிச்சை அறையில் ‘போட்டோஷூட்’: மருத்துவர் பணியிடை நீக்கம்

1 mins read
95b49e7b-c502-4a52-a31e-c6a9c479fbaa
காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. - படம்: சமூக ஊடகம்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் அபிஷேக்.

இந்நிலையில் அவருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அபிஷேக் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய ‘போட்டோஷூட்டை’ வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.

அதன்படி தான் பணியாற்றும் மருத்துவமனையில் ‘போட்டோஷூட்’ நடத்த முடிவு செய்தார்.

அறுவை சிகிச்சை அறையில் நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் ‘போட்டோஷூட்’ நடத்தி உள்ளனர். இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களிலும் அவர் பதிவிட்டார்.

காணொளியைக் கண்ட பலர் மருத்துவரைக் கடுமையாகக் கண்டித்தனர். அபி‌ஷேக் மருத்துவப் பணிக்கு இழிவு ஏற்படுத்திவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் மருத்துவர் அபிஷேக்கை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்