தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி மதுராவில் பயங்கர தீ விபத்து: பேருந்து- கார் மோதியதில் 5 பேர் பலி

1 mins read
77edbae6-7cfc-45d3-9942-eb9a8a71e152
மோதிய வேகத்தில் பேருந்தும் காரும் தீப்பிடித்துக்கொண்டன. - படம்: இந்திய ஊடகம்

மதுரா:  உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

அந்த சாலையில் வந்து கொண்டிருந்த சிறிய பேருந்து, கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தின் பின்பக்கத்தில் கார் மோதியதில், நிலை தடுமாறிய பேருந்து சாலையின் நடுப்பகுதி சுவரில் மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.

இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து பற்றிய காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்