தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயாளியை எலிகள் கடித்ததால் மருத்துவர்கள், தாதி இடைநீக்கம்

1 mins read
ba12c2f0-a346-468b-9a6d-396096c533fd
தெலுங்கானாவிலுள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை எலிகள் கடித்தன. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.

அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

அதையடுத்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி, அவசர சிகிச்சை பிரிவின் டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார், நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை இடைநீக்கம் செய்தனர்.

எலிகளைப் பிடிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பணியாளர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்