1995-2021 ஆண்டுகள் இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களில் 80% ஆண்கள்

புதுடெல்லி: கடந்த 1995-2021ஆம் ஆண்டுகளுக்கு இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களில் 5ல் 4 பேர் ஆண்கள். இதில் பாலின பாகுபாடு நிலவுவதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கொரன்டலா மாதவ் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் சிங் பாகெல், “இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து தானமாக பெற்று கடந்த 1995-2021ஆம் ஆண்டு இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 29,695 பேர் ஆண்கள், 6,945 பேர் பெண்கள். இந்த விகிதம் 4:1 என்ற அளவில், அதாவது 80 விழுக்காடு உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிக்ச்சை செய்த பெண்களின் விகிதம் கடந்த 2019ஆம் ஆண்டு 27.6 விழுக்காடாக இருந்தது. அது 2022ல் 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

“தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களிடம் நிலவும் பாலின வித்தியாசத்தை குறைக்க பல தரப்பினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தொடர்ந்து நடத்தி வருகிறது,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!