தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நம்பிக்கை தீர்மானத்தில் நிதீஷ் அரசு வெற்றி

1 mins read
37be8f0f-0edc-4eac-b737-fff868d64991
பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் நிதீஷ் குமாரின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

5 எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களுடன் ஆதரவாக 129 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடனான கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், கடந்த மாதம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஒன்பதாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார்.

பாஜகவைச் சேர்ந்த சம்ரத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சட்டமன்றத் தலைவர் அவாத் பிஹாரி செளத்ரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்