இந்திய எல்லையில் வட்டமிட்ட பாகிஸ்தானின் ஆளில்லா வானூர்தி

இந்திய எல்லையில் வட்டமிட்ட பாகிஸ்தானின் ஆளில்லா வானூர்தி

1 mins read
69b7955c-f685-462a-bdd5-fa2b422b57a5
படம்: - தமிழ்முரசு

மெந்தர் / ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஞாயிற்றுகிழமை இரவு பாகிஸ்தானின் ஆளில்லா வானூர்திமீது இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு முறை துப்பாக்கி்சூடு நடத்தியதாக அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

இந்திய நிலப்பரப்பில் சிறிது நேரம் வட்டமடித்த அந்த வானூர்தி இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் எல்லைக்குத் திரும்பியது. இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடி பொருள்கள், பறக்கும் வானூர்திகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்க வெகுமதி அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்