இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இன்று மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட ஏதுவாக தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்கு செல்ல புதன்கிழமை (பிப்ரவரி 14) அன்று மனுத்தாக்கல் செய்கிறார்.
இதற்கென மனுத்தாக்கல் செய்ய புதன்கிழமை இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் ராஜஸ்தான் சென்றார் திருமதி சோனியா. அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக உள்ளார். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்கு தேர்வாகி உள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மேலலையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை முடிவடையும். இவ்வாறு மேலவைப் பதவியை இழக்கும் உறுப்பினர்களின் இடங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு 68 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. அதுபோல் மத்திய அமைச்சர் முருகனின் பதவிக்காலமும் இவ்வாண்டு முடிவடைகிறது.