காலனித்துவத்துக்கு விடைகொடுத்த இந்தியக் கடற்படை

காலனித்துவத்துக்கு விடைகொடுத்த இந்தியக் கடற்படை

1 mins read
9f953972-a855-46a9-b5a3-bc080861f8de
இந்தியக் கடற்படைச் சிற்றுண்டி மையங்களில் காலனித்துவ ஆடைக்கு விடை கொடுக்கும் விதமாக இனி குர்தா-பைஜாமா ஆடைக்கு அனுமதி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியக் கடற்படைச் சிற்றுண்டி மையங்களில் காலனித்துவ ஆடைக்கு விடைகொடுக்கும் விதமாக அங்கு இனி இந்திய குர்தா-பைஜாமா ஆடைகளுடன் வரும் ஆடவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்திய பாரம்பரிய ஆடை வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

இதன் தொடர்பில், இந்தியக் கடற்படையின் அனைத்துச் சிற்றுண்டி மையங்கள், மனமகிழ் மன்றங்கள் போன்றவற்றில் குர்தா-பைஜாமா, குர்தாவுக்கு மேல் அணியும் மேல் சட்டையுடன் வரும் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கும்படி கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், இந்த குர்தா-பைஜாமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கண்டிப்பான சில வழிகாட்டிகள் உள்ளன. கடற்படைச் சிற்றுண்டி மையங்கள், மனமகிழ் மன்றங்களில் சாதாரண உடை அணியலாம் என்று இருந்தால் அணிந்து வரக்கூடிய குர்தா-பைஜாமா எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும், அதன் தையல்முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

குர்தா அழுத்தமான நிறமுடையதாக, முழங்கால் வரை நீண்டிருக்க வேண்டும் என்பதுடன் குர்தா கைநீளத்தின் முடிவில் பொத்தான்கள் அல்லது ‘கஃப்லிங்க்ஸ்’ இணைப்புகள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், குர்தா நிறத்துடன் இணைந்த அல்லது ஒத்துப்போகக்கூடிய நிறத்திலான குறுகலான கால்சட்டையுடைய பைஜாமா அணிய வேண்டும். மேலும், பைஜாமாவில் இடைவார் போன்ற பட்டையும் பைஜாமாவின் பக்கவாட்டில் பொருள்கள் வைக்கக்கூடிய பைகளும் இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்