பிப்ரவரி 21ஆம் தேதி பஞ்சாப் செல்கிறார் மம்தா பானர்ஜி: கெஜ்ரிவால், பகவந்த் மானைச் சந்திக்கிறார்

1 mins read
e51195e6-98be-45ae-9eb6-375fd3c3b5fb
பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவில் சென்று பிரார்த்தனை செய்வார். - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்காள முதல் அமைச்சரான மம்தா பானர்ஜி வருகிற 21ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லி மற்றும் பஞ்சாபில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கே செல்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்