திருப்பதியில் செருப்புக்கு பூட்டு போட்டுச் சென்ற பக்தர்கள்

திருமலை: திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.

எனவே, அந்த மையங்களில் காலணிகளைப் பக்தர்கள் பத்திரப்படுத்திவிட்டு, கோவிலுக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வந்து எடுத்துச் செல்வது வழக்கம்.

இதற்கிடையில், தேவஸ்தானத்தின் இலவச காலணிக் காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சரியான கண்காணிப்பு இல்லாததால், பக்தர்கள் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமலையில் நான்கு மாட வீதிகள் அருகே அமைந்துள்ள காலணிக் காப்பகத்தில், செருப்புகளை சில பக்தர்கள் வைத்து, அவற்றுக்கு பூட்டு போட்டுச் சென்றனர்.

இதை பார்த்த சிலர், ‘இவ்வளவு பெரிய கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தால் செருப்புக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா?’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!