கெஜ்ரிவாலுக்கு ஆறாவது முறையாக அழைப்பாணை

கெஜ்ரிவாலுக்கு ஆறாவது முறையாக அழைப்பாணை

1 mins read
61f0109a-37f0-4b27-8144-0bb49332767c
கெஜ்ரிவால் பிப்ரவரி 19ஆம் தேதி அமலாக்கத்துறையிடம் விளக்கம் தர வேண்டும் - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. இதுவரை 5 முறை அழைப்பாணை அனுப்பியும் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லவில்லை.

தனக்கு அனுப்பிய அழைப்பாணை சட்டவிரோதமானது, அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கெஜ்ரிவால்.

கெஜ்ரிவால் பிப்ரவரி 19ஆம் தேதி அமலாக்கத்துறையிடம் விளக்கம் தர வேண்டும் என்று அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்