பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி

பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி

1 mins read
54a96de8-df4d-4799-8486-d549e0283a6e
தலைநகர் புதுடெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி

சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் புதுடெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பஞ்சாப்பில் பேருந்துகள் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

குறிப்புச் சொற்கள்