டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம்

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம்

1 mins read
f5c4033b-ad15-45fb-8566-b1a90244572a
கட்டடம் திடீரென இடிந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயில் எண் 2 அருகே உள்ள கட்டடம் ஒன்று சனிக்கிழமை இடிந்து விழுந்தது.

அந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் கடுமையாகக் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், டெல்லி காவல்துறையினர் உள்ளிட்ட பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்