தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுல் - பிரியங்கா சகோதர உறவில் விரிசல்: பாஜக தகவல்

1 mins read
cf9fd89b-59f6-46b7-9da8-6d337270c9f5
பிரியங்கா காந்தி தமது சகோதரர் ராகுல் காந்தியுடன். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உடல்நலக்குறைவால் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.

ஆனால், அவருக்கும் அவரது சகோதரர் ராகுலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால்தான் பாதயாத்திரையில் கலந்துகொள்ளவில்லை என பாஜக கூறியுள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அமித் மாளவியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “அனைவரும் தங்களது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ராகுல் காந்தி யாத்திரை துவங்கிய போதும் மணிப்பூரில் பிரியங்காவைக் காணவில்லை.

“யாத்திரை உத்தரப்பிரதேசம் வந்தடைந்த போதும் அவரைப் பார்க்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் உரிமை தொடர்பாக ராகுல் -பிரியங்கா இடையே சரிசெய்ய முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது தற்போது நன்றாகத் தெரிகிறது,” என்று மாளவியா தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்