புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே சனிக்கிழமை (பிப்ரவரி 17) காலை, சரக்கு ரயில் ஒன்றின் கிட்டத்தட்ட 10 பெட்டிகள் தடம் புரண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டேல் நகர்-தயாபஸ்தி பிரிவில், வடக்கு டெல்லியிலுள்ள ஸகிரா மேம்பாலத்திற்கு அருகே காலை 11.50 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
ரயில்வே காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சரக்கு ரயில், இரும்புத் தகடுச் சுருள்களை மும்பையிலிருந்து சண்டிகருக்குக் கொண்டுசென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
விசாரணை தொடர்கிறது.

