லாரி-ஆட்டோ மோதல்: 8 பேர் பலி

1 mins read
36b3a385-5e60-4b28-ae11-54999010075c
காயமடைந்த ஆறு பேரும் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அந்த 14 பேரும் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள்.

லக்சிசராய் மாவட்டம், ராம்கர் சவுக் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூல்னா கிராமம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) நள்ளிரவு அந்த விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக, பாட்னாவில் உள்ள பிஎம்சிஹெச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்