காவல்துறை அதிகாரியின் பாலியல் வன்கொடுமை

காவல்துறை அதிகாரியின் பாலியல் வன்கொடுமை

1 mins read
c3d2a0be-198c-4915-9047-8a7ed33862c3
இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் அங்கித் சிங்கை கைது செய்ய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கவுரி பஜார் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் அங்கித் சிங். அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் டியோரியாவிற்கும் அங்கித்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

டியோரியாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிய அங்கித், அந்தப் பெண்ணை பல முறை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக அங்கித் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக டியோரியா, காவல்துறை கண்காணிப்பாளர் சங்கல்ப் ஷர்மாவிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அங்கித் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இதற்கிடையே, பெண் காவலர் டியோரியாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்