இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2050ஆம் ஆண்டு 19.5 விழுக்காட்டினர் முதியோர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போதைய 140 கோடி மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட 10.4 கோடிப் பேர் மூத்தோராக உள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2050ஆம் 19.5 விழுக்காடாக அதிகரிக்கும்’ என்று மத்திய அரசுக்கு தொலைநோக்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆயோக் அமைப்பு தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\

இது தொடர்பாக நிதி ஆயோக் ‘மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதனால், மூத்தோரின் சேமிப்புக்குக் கூடுதல் வட்டி, குடியிருப்புத் திட்டம், கட்டாய சேமிப்புத் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்த அந்த அறிக்கையில் அது பரிந்துரைத்துள்ளது.

மேலும், “முதியோர்களுக்கு எளிதாக சேவைகள் அளிக்க தேசிய அளவில் இணையத்தளத்தை உருவாக்க வேண்டும்.

“இந்தியாவில் பெரும்பாலான முதியோர், வங்கிச் சேமிப்பு வட்டியை நம்பி உள்ளதால், அதற்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்.

“வயதான பெண்களுக்கு கூடுதல் வரிச் சலுகைகள் வழங்க வேண்டும். முதியோர் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி, ஜிஎல்டி மேலும் அதிகரித்து, முதியோருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

“பெருநிறுவனங்கள் அளிக்கும் சமூக பொறுப்பு நிதியின் மூலம் நிதி ஆதாரம் இல்லாத முதியவர்களுக்கு சேவைகள் வழங்க வேண்டும். குடியிருப்பு திட்டங்கள் உருவாக்க வேண்டும்.

“தனியார் மருத்துவமனைகள் முதியவர்களுக்கு கட்டணங்களில் தள்ளுபடி சேவை அளிக்க வேண்டும்,” என்று நிதி ஆயோக் பரிந்துரைத்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!