ஹைதராபாத்: திருமணம் செய்து கொள்வதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திச் சென்ற பெண் தொழிலதிபர் உள்பட ஐவரை ஹைதராபாத் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைக்காட்சி தொகுப்பாளர் போல ஆள்மாறாட்டம் செய்து பெண் தொழிலதிபரிடமிருந்து பணம் பறித்ததைத் தொடர்ந்து இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 31 வயது பெண் தொழிலதிபர் போகிரெட்டி த்ரிஷா. ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இவர், தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்பவரைக் கடத்தியதைத் தொடர்ந்து பெண் தொழிலதிபர், அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட ஐந்து பேரைக் காவலர்கள் கைது செய்தனர்.
ஒருசமயம் போகிரெட்டி த்ரிஷாவின் தொடர்பை பிரணவ் சிஸ்ட்லா துண்டித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த த்ரிஷா நால்வரைக் கூலிக்கு அமர்த்தி, பிரணவ் சிஸ்ட்லாவை கடத்தி தனது அலுவலகத்துக்கு கொண்டுவந்துள்ளார். அதன்பின்னர், தன்னைத் திருமணம் செய்துகொண்டால்தான் விடுவிப்பேன் என அவரைத் தாக்கி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, போகிரெட்டி த்ரிஷா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.