ஓட்டுநர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்

ஓட்டுநர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்

1 mins read
ccbc48c7-368b-47f8-a6ad-199bd21a05b5
படம்: - தமிழ்முரசு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஓட்டுநரின்றி 70 கி.மீ தூரம் சரக்கு ரயில் ஒன்று சென்றது. இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில், ஓட்டுநர் ரயிலை நிறுத்தும் கைக்கருவியைக் கொண்டு நிறுத்தாமல் இறங்கியதால் சரக்கு ரயில் ஒன்று 100 கி.மீ., வேகத்தில் 5 நிலையங்களைக் கடந்து 70 கி.மீ. தூரம் வரை சென்றது. இதையடுத்து பஞ்சாபின் கோஷியார்பூரில் சரக்கு ரயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்