இந்தியாவின் ஆக நீளமான கம்பிவட பாலத்தை திறந்துவைத்தார் மோடி

ஆமதாபாத்: நாட்டின் ஆக நீளமான சுதர்சன் சேது கம்பிவட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இப்பாலத்தின் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். “நிலங்களையும் மக்களையும் இணைக்கும் சுதர்சன் சேது பாலத்தை ஞாயிறு அன்று திறந்து வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இது ஒரு சான்றாக நிற்கிறது,” என இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

சுதர்சன் சேது பாலத்தின் சிறப்பம்சங்கள்

நான்கு வழி கொண்ட இப்பாலம் 979 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆக நீண்ட கம்பிவட பாலம் என்ற பெருமையை பெற்ற இது 27.20 மீட்டர் அகலம் கொண்டது. குஜராத்தின் ஓகா நிலப்பரப்பையும் துவாரகா தீவையும் இணைக்கும் இப்பாலம் 2.32 கிமீ., நீளம் கொண்டது. இவற்றில் 900 மீட்டர் தொலைவுக்கு கம்பிவடங்களால் இருபுறமும் இணைக்கப்பட்ட பகுதி, பாலத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

முன்னதாக, ‘சிக்னேச்சர் பாலம்’ என அழைக்கப்பட்ட இப்பாலம் தற்போது ‘சுதர்சன் சேது’ அல்லது சுதர்சன் பாலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களாலும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நடைபாதையின் மேல் பகுதியில் சூரியத் தகடுகள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பாலம், குஜராத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பேய்ட் துவரகாவில் அமைந்துள்ள இக்கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார் பிரதமர் மோடி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!