தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹைதராபாத் விமான நிலையத்தில் அறிவார்ந்த தள்ளுவண்டிகள்

1 mins read
fdd90ebd-65f2-480d-82cd-b5bfc908d2b0
இந்தியாவிலோ மற்ற நாடுகளிலோ உள்ள பல விமான நிலையங்களில் கூட இந்தத் தள்ளுவண்டி வசதி இல்லையாம். - படம்: எக்ஸ்/ஹர்ஷ் கோன்கா

ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள அறிவார்ந்த தள்ளுவண்டிகள் குறித்து சமூக ஊடகப் பிரபலங்களும் ஆனந்த் மகேந்திரா போன்ற தொழிலதிபர்களும் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

ஹர்ஷ் கோன்கா என்பவர், இப்புதிய வசதி குறித்து அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இந்தியாவிலோ மற்ற நாடுகளிலோ உள்ள பல விமான நிலையங்களில் கூட இந்தத் தள்ளுவண்டி வசதி இல்லை.

அறிவார்ந்த தள்ளுவண்டியின் அம்சங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்த கோன்கா, “நமது நாடு அறிவார்ந்ததாக ஆவதைக் காண்பது ஆச்சரியம் தருகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் கூட இத்தகைய தள்ளுவண்டிகளை நான் பார்த்ததில்லை,” என்றார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்