தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலத்த பாதுகாப்புடன் 1,608 பேர் காவலர் தேர்வு; கைக்குழந்தையுடன் தேர்வெழுதிய இளம்பெண்

1 mins read
87b97588-f5cc-4bd0-93a4-7d0f7fe16a30
மகளிர் காவலர் பணிக்கான தேர்வெழுதுவதற்காக தனது நான்கு மாத கைக்குழந்தையுடன் பிஜாப்பூரில் இருந்து வந்திருந்த பெண். - படம்: இந்திய ஊடகம்

பெங்களூர்: காவலர் துறையில் ஏட்டு, மகளிர் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தங்கவயலில் இரண்டு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி அளவில் தேர்வு எழுத வந்த ஆண்கள் காலணி அணியவும் பெண்கள் தாலியைத் தவிர வேறு நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லூரி, உரிகம் முதல் நிலைக் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்த 3,000 பேரில் 1,608 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,392 பேர் தேர்வெழுத வரவில்லை. .

இவர்களில், பிஜாப்பூரில் இருந்து பாக்யலட்சுமி என்ற பெண் தனது நான்கு மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார்.

அவர் குழந்தையைத் தனது தாயிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதி முடிக்கும்வரை அவரது தாய் அங்கிருந்த அறையில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
காவலர்