பாட்னா: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம், மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சரக்கு லாரியும் ஜீப்பும் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக்கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜீப் முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதி, அதன்பின் ஜீப்பும் பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தப்பியோடிய லாரி ஓட்டுநரைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே பாரளப்பள்ளியில் கார் மோதியதில் ஐவர் உயிரிழந்தனர்.
சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய கார் எதிரே வந்த லாரி மீதும் மோதியதில் ஐவர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மதனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

