நந்தனம் திடலில் நடைபெறும் மாபெரும்பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

நந்தனம் திடலில் நடைபெறும் மாபெரும்பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

1 mins read
2b325dad-5cf9-49be-b605-fcbfb2748c38
பிரதமர் மோடி - கோப்புப் படம்: ஏஎஃப்பி

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி மீண்டும் மார்ச் 4ஆம் தேதி சென்னைக்கு வருகையளிக்கிறார்.

அப்போது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் அவர் உரையாற்றுகிறார்.

செவ்வாய்க் கிழமை பல்லடத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து செவ்வாய் இரவு மதுரையிலும், புதன்கிழமை தூத்துக்குடி, நெல்லையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் செய்த பிறகு மீண்டும் அடுத்த ஐந்து நாள்களில் அவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

வருகிற 4ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வரும் அவர், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக பா.ஜ.க தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சென்னை விமான நிலையத்திலிருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு அவர் ஹெலிகாப்டரில் வருவதால் அங்கு ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது.

மூன்று மணியளவில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

தமிழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவது பா.ஜ,கவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தேர்தலில் பாஜக தமிழகத்திலும் சில தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று திட்டமிட்டு இருப்பதால் மோடியே நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்