58 வயதில் கர்ப்பமான பாடகரின் தாயார்

58 வயதில் கர்ப்பமான பாடகரின் தாயார்

1 mins read
1646a9c1-1138-4c8b-a89c-7688e57e1011
தாயார் சரண் சிங்குடன் பாடகர் சித்து மூஸ்வாலா. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா 58 வயதில் கர்ப்பமாகியுள்ளார்.

ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவரது தாயார் 58 வயதான சரண் சிங்கை வெகுவாகப் பாதித்தது.

இதனால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தையைப் பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இதையடுத்து செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.

வரும் மார்ச் மாதம் அவருக்குக் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்தக் கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.

இச்சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவரது 58 வயது தாயார் கர்ப்பமாகியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்