வளர்ப்பு மகளுக்குப் பாலியல் வன்கொடுமை; ஆடவருக்கு 51 ஆண்டுச் சிறை

வளர்ப்பு மகளுக்குப் பாலியல் வன்கொடுமை; ஆடவருக்கு 51 ஆண்டுச் சிறை

1 mins read
79fd73d1-1f0e-4c76-93b8-6706262f9b16
படம்: - தமிழ் முரசு

இடுக்கி: வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 40 வயது இந்திய ஆடவருக்கு மொத்தம் 51 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், மூணாறு நகரில் 2018ஆம் ஆண்டில் அவ்விருவரும் வசித்த வீட்டில் அந்த 17 வயதுப் பெண்ணுக்கு அக்கொடுமை இழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது குற்றவாளிக்கு 34 வயது.

பாலியல் குற்றங்களிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் குற்றவாளிக்கு பல்வேறு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. தேவிகுளம் நகர விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 28 ) தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், சிறைத்தண்டனைகள் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதால் குற்றவாளி 20 ஆண்டுகளுக்குச் சிறையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அவருக்கு ரூ.155,000 அபராதம் விதித்த நீதிமன்றம், அதனைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்