புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரப்பாலம் ஒன்று இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும், தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இப்பாலத்தை தயாரித்துள்ளன. கனரக வாகனத்தில் இந்தப் பாலத்தை எளிதாக பொருத்திவிட முடியும் என்றும், எந்த இடத்திற்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும் என்றும், ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.
46 மீட்டர் நீளம் உள்ள இந்த பாலம் ராணுவத்துடன் இணைக்கப்படும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்றது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலும் 41 இயந்திரப் பாலங்கள் ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் இதற்கு 2,585 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

