திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை அக்கட்சித் தலைமை களம் இறக்கியுள்ளது.
ஆனி ராஜா அக்கட்சியின் தேசிய செயற் குழு உறுப்பினராக உள்ளார். இண்டியா கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்ளன. எனினும் கேரள மாநிலத்தில் இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வசம் 17 தொகுதிகள் உள்ளன. வரும் தேர்தலில் காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம் அமைத்து செயல்படுகிறது இந்திய கம்யூனிஸ்ட்.

