போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பு என மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தில் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2011-12ஆம் ஆண்டில் இந்திய கிராமங்களில் புகையிலை, போதைப் பொருள்களின் பயன்பாடு 3.21 விழுக்காடாக இருந்தது என்றும் கடந்த 2022-23ஆம் ஆண்டில் இது 3.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2011-12இல் இந்திய நகரங்களில் புகையிலை, போதைப் பொருள்களின் பயன்பாடு 1.61 விழுக்காடாக இருந்தது என்றும் கடந்த 2022-23இல் இது 2.43 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இந்திய கிராமங்களில் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த தொகை குறைந்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிராமங்களில் கல்விக்கான செலவு 3.49% ஆக இருந்தது என்றும் கடந்த நிதியாண்டில் இச்செலவு விகிதம் 3.30% ஆக குறைந்துவிட்டது என்றும் மத்திய அரசின் ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!