மாயமான கடற்படை வீரர்: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

மாயமான கடற்படை வீரர்: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

1 mins read
79a76250-1259-4755-9e65-c5278717fb55
மாயமான கடற்படை வீரர் சாஹில் வர்மா. - படம்: ஊடகம்

ஜம்மு: பணியில் இருந்த இந்தியக் கடற்படை வீரர் சாஹில் வர்மா, கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி காணாமல் போனார்.

இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் சாஹில் வர்மாவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியக் கடற்படைக் கப்பலில் இருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போனதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் அதிர்ச்சியளிப்பதாக ஜம்மு மாவட்டத்தில் வசிக்கும் சாஹில் வர்மாவின் தந்தை சுபாஷ் சந்தர் கூறியுள்ளார்.

கப்பலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளிலும் என் மகன் காணப்படவில்லை என்றால் அவர் எங்கே தான் சென்றார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் தங்கள் மகன் பத்திரமாக திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் சாஹில் வர்மாவின் தந்தை சுபாஷ் சந்தர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்