புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 5ஆம் தேதி ஒடிசா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார். பயணத் திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று பாஜக மாநிலத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் லதா உசெந்தி தெரிவித்தார்.
மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் ஒடிசாவுக்குச் செல்வார் என்றும், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தோகோலேயில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் முன்னதாக தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஒடிசா வருகை மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.