வயல்வெளியில் தரையிறங்கிய ராணுவப் பயிற்சி விமானம்

வயல்வெளியில் தரையிறங்கிய ராணுவப் பயிற்சி விமானம்

1 mins read
98d4ed75-a3d5-4466-a10c-0ba08b850882
பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பார்பர் பகுதியில் நெற்வயலில் தரையிறங்கிய இந்திய விமானப் படை பயிற்சி விமானம். - படம்: ஊடகம்

கயா: இந்திய ராணுவத்தின் சிறிய வகை விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் தரையிறங்கியது.

இந்திய ராணுவ பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான அந்த விமானத்தில் பயிற்சி விமானிகள் இரண்டு பேர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென வயலுக்குள் இறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயிற்சி விமானிகள் இருவரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பார்பர் என்ற பகுதியில் நிகழ்ந்தது.

நல்லவேளையாக விமானம் தாறுமாறாகத் தரையிறங்கிய அந்த வயலில் விவசாயிகள் யாரும் பணியில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்