பாஜக வில் இணையும் கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி

பாஜக வில் இணையும் கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி

1 mins read
f8fed0a2-2374-460b-ad48-ffd84cf8eb55
அபிஜித் கங்கோபாத்யாய். - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் 62 வயதான அபிஜித் கங்கோபாத்யாய் வியாழக்கிழமையன்று ( மார்ச் 7) பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் ஓய்வுபெற இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் அதிபர் திரௌபதி முர்முவுக்கு செவ்வாய்க்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை அபிஜித் அனுப்பியுள்ளார்.

“நீதிபதி பதவியை நான் இன்று ராஜினாமா செய்துவிட்டேன். வரும் 7-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். நான் பாஜகவில் இணைந்த பிறகு எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவில் தொடர்வேன்,” எனச் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்