மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார் ராகுல்:பிரதாப் சிங்கல்

1 mins read
c68ff2d3-d44e-4552-b790-e5492d52a765
ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது மக்களை நோக்கி கையசைக்கும் ராகுல் காந்தி. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரதாப் சிங்கல் தெரிவித்தார்.

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் உடனான தனது சந்திப்பை முடித்துகொண்டு உத்தரப் பிரதேசம் திரும்பியுள்ள அவர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

மேலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பைக் காங்கிரஸ் தலைமை விரைவில் வெளியிடும் என்றார் சிங்கல்.

சென்ற 2002ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாகத் கூறப்பட்டுள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தின் முக்கிய சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்