நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி

1 mins read
24f28205-3671-406f-b3a9-9214da22cad9
பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப்படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு 6,400 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

அந்நடவடிக்கைக்குப் பின்னர் பிரதமர் அங்கு செல்வதால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

ஸ்ரீநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இதையொட்டி அங்கு பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டதுடன், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை அடுத்து தற்போது ஜம்மு காஷ்மீருக்கும் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்