சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இரண்டு நாள் பயணமாக கடந்த பிப். 27ல் தமிழகம் வந்த மோடி, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, கடந்த மார்ச் 4ஆம் தேதிதான் சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, இந்த ஆண்டில் மூன்று மாதங்களில் 5வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.
ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடி கடந்த 2-3.1.2024, 19-21.1.2024, 27-28.2.2024, 4.3.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு மூன்று மாதங்களில் நான்கு முறை வருகை மேற்கொண்டுள்ளார். இப்போது ஐந்தாவது முறையாக 22.3.2024ஆம் தேதி வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

