லக்னோவ்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அறிவித்தார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப்போவதாகவும் மூன்றாவது அணி உருவாக்க போவதாகவும் வெளியான அனைத்து தகவல்களும் வதந்தியே. உத்திரப் பிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிடப் போவதால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. அதனால், பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றன,” எனக் கூறினார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.