‘உணவுப் பொருள்களின் விலைகள் கூடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’

‘உணவுப் பொருள்களின் விலைகள் கூடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’

1 mins read
6b73b9da-f9db-4dff-a5b1-c764f7095071
படம்: - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: வெங்காயம், தக்காளி முதல் பருப்பு வரை த்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருக்குமா என்று பியூ‌ஷ் கோயலிடம் இந்திய ஊடகங்கள் கேள்வி கேட்டபோது அந்த பதிலை அவர் தெரிவித்தார்.

“குடும்பங்களின் வரவு செலவுகளில் எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். பெண்களிடையே பொருளாதார அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்