தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியலில் களமிறங்கிய யூசுப் பதான்

1 mins read
8b636757-fd12-46f9-bfeb-728d3bfd34e0
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் யூசுப் பதான் போட்டியிடுகிறார். - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 42 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான் இடம் பெற்றுள்ளார். அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களப் பணியில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என கட்சிகள் பரபரப்பாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்